தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 2025- ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருது பெற தகுதியானவர்கள் 25.08.2025-க்குள் விண்ணப்பிக்கலாம்
தமிழ் வளர்ச்சிக்காகப் பணியாற்றி வரும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்களின் தமிழ்த் தொண்டினைப் பெருமைப்படுத்தும் வகையில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆண்டுதோறும் மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் தமிழ் ஆர்வலரைத் தேர்வு செய்து தமிழ் செம்மல் விருது வழங்கப்பெற்று வருகின்றது. 2025ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விருதுநகர் மாவட்டத்தில் தமிழ் செம்மல் விருதுக்கான விண்ணப்பப் படிவத்தினை நேரிலோ தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்திலோ (www.tamilvalarchithurai.tn.gov.in) கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம்.
தன்விவரக்குறிப்புகளுடன் வட்டாட்சியர் வழங்கும் குடியிருப்புச் சான்றிதழ் அல்லது ஆதார் அட்டை (நகல்), நூல்கள், கட்டுரைகள், பெற்ற விருதுகள், தமிழ்ச்சங்கங்களின் பொறுப்பு, தமிழறிஞர் / தமிழ் அமைப்புகளின் பரிந்துரைக் கடிதம் மற்றும் 2 கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) அளவு புகைப்படம், ஆற்றிய தமிழ்ப் பணிகளுக்கான சான்றுகள் ஆகியவற்றை இணைத்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் 25.08.2025-க்குள் அளிக்க வேண்டுமெனவும் நேரடியாக சென்னை தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில்அளிக்கப்பெறும்விண்ணப்பங்கள்ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply