பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் நான் முதல்வன் பினிஸிங் ஸ்கூல் திட்டத்தின் கீழ் தொழிலக பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 31.03.2025-அன்று வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது
பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தின்கீழ்; வேலைவாய்ப்பு பயிற்சி (PM INTERNSHIP) வழங்கும் திட்டத்தின்வாயிலான நடப்பாண்டில் தமிழ்நாட்டில் ஏறத்தாழ 14889 நபர்களுக்கு முன்னனி தொழிற்நிறுவனங்களின் வேலைவாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி விருதுநகர் மாவட்டத்தில் இத்திட்டத்தில் சேர்வதற்கு தேவையான கல்வி தகுதியுடைய 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, தொழிற்கல்வி, பட்டயப்பொறியாளர், இளங்கலை கலை, அறிவியல், வணிகவியல், கணினி பயன்பாடு, வணிக நிர்வாகம் மற்றும் பார்மஸி பட்டம் முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக பயிற்சி அளிக்கும் பொருட்டு இணையதளத்தில் பதிவு செய்திடும் பணி நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற 21 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். பயிற்சிக்காலத்தில்12மாதங்களுக்குஉதவித்தொகையாக மாதத்திற்கு ரூ.5000- வீதம் வழங்கப்படும்.மேலும், பயிற்சிக்காலத்தில் ஒருமுறை மட்டும் மானியமாக ரூ.6000 வழங்கப்படும். இத்திட்டத்தில் பயிற்சி பெற விரும்புவர்கள் கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட கைபேசியுடன் வரவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், ஏற்கனவே தேசிய தொழிற்பழகுநர் திட்டத்தில் தொழிற் பழகுநர் பயிற்சி பெற்றிருக்க கூடாது. மேலும் முழுநேர பணிசெய்பவராகவோ, முழுநேரக் கல்வி கற்பவராக இருக்ககூடாது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க 31.03.2025 அன்று கடைசி நாளாகும்.
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொழில்நெறிவழிகாட்டுமையம் மற்றும் விருதுநகர், சூலக்கரை அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் தற்போது இதற்காக இணையவழி பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேற்கண்ட பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் அரசு வேலை நாட்களில் காலை10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மேற்க்கண்ட கல்விச்சான்றிதழ்களுடன் நேரில் வந்து பதிவு செய்யலாம். மேலும் தகவலுக்கு (04562 -294755) என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் இத்திட்டத்தில் நேரடியாக விண்ணப்பிக்க விரும்புவோர் https://pminternship.mcg.gov.in/ என்ற வலைதளத்தையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
மேலும், நான் முதல்வன் பினிஸிங் ஸ்கூல் (NMFS) என்னும் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சித்திட்டத்தில் இணைந்து பயிற்சி பெற விரும்புவோர் 16 வயது முதல் 45 வரை உள்ளவர்கள் அதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இணையதள முகவரியில் https://candidate.tnskill.tn.gov.in இல் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட இருதிட்டங்களிலும் விண்ணப்பிக்க விரும்புவோர் மேற்காணும் வலைதளங்களில் நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S,, அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply