25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


 ஏன் பிரியாணியில் ஏலக்காய் சேர்க்கிறார்கள்?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

 ஏன் பிரியாணியில் ஏலக்காய் சேர்க்கிறார்கள்?

ஏலக்காயை இந்தியர்கள் பல நூற்றாண்டுகளாக சமையலுக்கு பயன்படுத்தும் மசாலாப் பொருள் ஆகும். இது பொதுவாக இனிப்பு மற்றும் காரமான உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக அசைவ உணவுகளில் வாசனைக்காக அதிகமாக பயன்படுத்தப்படும். அதுமட்டும் அல்ல, தற்போது மக்கள் ஏலக்காயை பயன்படுத்தி காஃபி ,டீ ஆகியவற்றையும் தயார் செய்து வருகின்றனர். 

ஏலக்காய் உட்கொள்வது செரிமான அமைப்பை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களுக்கு எதிராக போராடும் திறன் கொண்டது. இது, லேசான இனிப்பு மற்றும் புதினா போன்ற சுவை கொண்டவை. எனவே, இது வாயில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவை அழிக்கிறது. மேலும், வாய் துர்நாற்றத்தைய கட்டுப்படுத்துகிறது.

ஏலக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இது உணவு மற்றும் காய்கறிகளின் சுவை மற்றும் மனத்தை அதிகரிக்க பயன்படுகிறது. அதுமட்டும் அல்லாது ஏலக்காயை தொற்று மற்றும் ஒவ்வாமைகளை கட்டுப்படுத்தவும் பயன்படுத்தலாம். இதில், பல்வேறுதாதுக்கள், இரும்பு, மாங்கனீசு, கால்சியம், பொட்டாசியம், ரிபோஃப்ளேவின், நியாசிஸ்  மற்றும் மெக்னீசியம் உள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News