25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ராஜபாளையத்தில் ஜி.ஆர்.டி. ஜுவல்லரியின் 67வது ஷோரூம் திறப்பு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையத்தில் ஜி.ஆர்.டி. ஜுவல்லரியின் 67வது ஷோரூம் திறப்பு.

ராஜபாளையத்தில் ஜி.ஆர்.டி. ஜுவல்லரி தனது 67வது ஷோரூமை திறந்து வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.

புதிய ஷோரூம் திறப்பு விழாவையொட்டி, தங்க நகைகள் வாங்குவோருக்கு ஒரு கிராமுக்கு ரூ.250 தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், பழைய தங்கத்தை மாற்றி புதிய நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு கிராமுக்கு ரூ.150 கூடுதல் மதிப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வைர நகைகளின் மதிப்பில் 12.5 சதவீதம் வரை விலை குறைப்பு, வெள்ளிப் பொருட்களின் சேதாரக் கட்டணத்தில் 25 சதவீதம் வரை தள்ளுபடி மற்றும் வெள்ளி நகைகளுக்கு எம்.ஆர்.பி. விலையில் 10 சதவீதம் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘ஜி.ஆர்.டி. கோல்டன் லெவன் பிளெக்ஸி’ திட்டத்தில் சேரும் வாடிக்கையாளர்களுக்கு இரட்டிப்பு பரிசுகளும் வழங்கப்படுகின்றன.

நிகழ்ச்சியில் பேசிய நிர்வாக இயக்குநர் ஜி.ஆர். ஆனந்த பத்மநாபன், “67வது ஷோரூம் திறப்பு என்பது எங்கள் வாடிக்கையாளர்களுடன் பல தலைமுறைகளாக தொடரும் நம்பிக்கையான உறவின் அடையாளமாகும்” என்றார்.

மற்றொரு நிர்வாக இயக்குநர் ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் கூறுகையில், “முதல் ஷோரூமை திறந்தபோதைய உற்சாகமும் அர்ப்பணிப்பும் இன்றளவும் தொடர்கிறது. திறப்பு விழா சிறப்பு சலுகைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என அழைப்பு விடுத்தார்.

திறப்பு விழாவையொட்டி ஏராளமான வாடிக்கையாளர்கள் வருகை தந்து நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை வாங்கிச் சென்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News