மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள குரூப் ‘B’ மற்றும் ‘C’ பணிகளுக்கான SSC (Staff Selection Commission) தேர்விற்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள குரூப் ‘B’ மற்றும் ‘C’ பணிகளுக்கு SSC (Staff Selection Commission) தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். Inspector of Income Tax, Postal Assistan in Dept of Posts, Tax Assistant in CBDT உள்பட பல்வேறு பணியிடங்களுக்கு SSC, CGL தேர்வு மூலம் தோராயமாக 14,582 நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் SSC, CGL தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.07.2025 மற்றும் தேர்வு தேதி 13.08.2025 முதல் 30.08.2025 வரை நடைபெற உள்ளது.
மேலும், MTS/Junior Engineer/Examiner/Accountant/Nursing Office உள்பட பல்வேறு பணியிடங்களுக்கு SSC Selection Post Exam-2025 (Phase-XIII) தேர்வு மூலம் 2,423 நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
10th / 12th / ITI / டிப்ளோமா / பட்டப்படிப்புடன் விண்ணப்பிக்கும் பணிக்குரிய தொழில்நுட்பக் கல்வித் தகுதி அல்லது பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இத்தேர்வுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க கடைசி நாள் 23.06.2025, மற்றும் தேர்வு தேதி 24.07.2025 முதல் 04.08.202 வரை நடைபெற உள்ளது.
தேர்விற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.100 பெண்கள் SC /ST /PWD /Ex-SM பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. மேலும், கூடுதல் விவரங்களுக்கு www.ssc.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். எனவே. மேற்காணும் தேர்வை மாவட்ட இளைஞர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply