உங்களுடன் ஸ்டாலின்” இதுவரை நடைபெற்ற 46 முகாம்களில் மொத்தம் 11,145 மனுக்கள் பெறப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
உங்களுடன் ஸ்டாலின் முகாமானது மாவட்டத்தில் 15.07.2025 முதல் நடைபெற்று வருகிறது. இம்முகாமானது கிராமப்பகுதியான 11 ஊராட்சி ஒன்றிய பகுதியில் 229 முகாம்களும், நகரப் பகுதிகளான சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சி பகுதிகளில் 120 முகாம்கள் என மொத்தம் 349 முகாம்கள் நடைபெற உள்ளது.மேலும், இம்முகாம்களில் நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும் ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் அளிக்கப்படுகிறது.
உங்களுடன் ஸ்டாலின் முகாமானது 15.07.2025 முதல் 25.07.2025 வரை நடைபெற்ற 46 முகாம்களில் மொத்தம் 11,145 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதில் இதுவரை 171 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வேண்டி 10,537 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மேலும், இதர மனுக்களுக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், இம்முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45-நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும். எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்கள் உங்கள் வீட்டின் அருகிலுள்ள முகாம்களுக்கு சென்று மனுவை அளித்து தங்களின் குறைகளுக்கு தீர்வு காண இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்தார்.
0
Leave a Reply