25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


அரசு மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில், “பழவம் குறுங்காடு” எனும் சுமார் 40,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அரசு மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில், “பழவம் குறுங்காடு” எனும் சுமார் 40,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், வேண்டுராயபுத்தில், (05.10.2024) சிவகாசி பசுமை மன்றம் சார்பில், அரசு மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில், “பழவம் குறுங்காடு” எனும் சுமார் 40,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியினை சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள், சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ந.ப்ரியா,I AS., அவர்கள் மற்றும் துணை இயக்குநர் (திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) திரு.ப.தேவராஜ்.,இ.வ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் மரக்கன்றுகள் நட்டு  துவக்கி வைத்தார்.

இந்த பழவம் குறுங்கட்டில், 210 விதமான 40,000 பூர்வீக மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. இதில், 6800 அடி பாசன குழாய்கள் அமைக்கப்பட்டு, 9000 மீட்டர் சொட்டுநீர் பாசனமும், 3510 அடி வேலி அமைத்தும் பராமரிக்கப்படுகிறது.மதுரையில் நேற்று வீசிய காற்றினால் நூற்றுக்கணக்கான மரங்கள் சாய்ந்துள்ளன. நூற்றுக்கணக்கான மரங்கள் மட்டுமல்ல ஆயிரக்கணக்கான மரக்கிளைகளை அது முறித்து இருக்கிறது. அக்டோபர் மாதம் இதற்கு முன்பான வானிலை குறிப்புகளை பார்த்தால் 150 ஆண்டுகளில் இந்த காலகட்டத்தில் எவ்வளவு வேகமாக காற்று வீசியதற்கான வரலாறு இல்லை.

 இதெல்லாம்  பருவநிலை  மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை காட்டுகிறது. குறிப்பாக தமிழ்நாடு அதிகப்படியாக நகர்ப்புறமாக வளர்ச்சி அடையக்கூடிய மாநிலமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் 50 சதவீதத்திற்கும் மேலான மக்கள் நகரப்புறங்களில் தான் வசிக்கிறார்கள்.  2030ல் இது  70 சதவிகிதமாக மாறி விடும் என்கிறார்கள்.  வரும் 2040-ல் ஏறத்தாழ 90 சதவீதமான மக்கள் நகர்ப்புற பகுதிகளில் தான் வசிப்பார்கள். அதனால் நகரத்தின் மீது அவற்றின் இயற்கை வளங்களின் மீது நாம் தரக்கூடிய அழுத்தம் என்பது மிக அதிகமாக இருக்கின்றது. இட நெருக்கடி, சுற்றுச்சூழல், தனிமனித சுகாதாரத்தை ஒட்டி வரக்கூடிய பிரச்சினைகள் அதிகமாகும்.  

 நகரமயமாகும் போது அதற்கு ஏற்ப சாலைகள் விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் போது உடனடியாக இது  சுற்றுச்சூழலை பாதித்து பருவநிலை மாற்றத்தை உண்டாக்கும். எனவே நாம் வாழக்கூடிய பூமியில் இந்த பூமியை வாழ்வதற்கு ஏற்ப மாற்ற வேண்டுமானால், உரிய பசுமை பரப்பை நாம் வைத்திருக்க வேண்டும். ஒரு நாட்டில் 33 சதவீதம் பசுமை பரப்பு இருக்க வேண்டும். மூன்றில் ஒரு பகுதி காடுகளாக இருக்க வேண்டும். இது விருதுநகர் மாவட்டத்தில் 10 விழுக்காடுக்கும் குறைவாகவே இருக்கிறது.மரக்கன்றுகளை நடுதலை தினந்தோறும்  மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் அவர்கள் எந்த துறையில் பணிபுரிபவராக இருந்தாலும், அதை ஒட்டி நம்மால் முயன்ற அளவிற்கு சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு மரம் நடுதலை அதிகப்படியான எண்ணிக்கையில் மேற்கொள்ள வேண்டும். மரம் நடுவதோடு மட்டுமல்லாமல் அதை ஓராண்டுக்காவது பராமரிக்க வேண்டும்.

ஒவ்வொரு நிறுவனங்களும் இது போன்ற இடங்களில் பசுமை பரப்பை உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நமது மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலைகள் மட்டும் 1100 தொழிற்சாலைகள் இருக்கின்றன. பெரிய அளவிலான அச்சு தொழிற்சாலைகள் 400-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இருக்கின்றன. இந்த தொழிற்சாலைகள் எல்லாம் இணைந்து மரக்கன்றுகளை நட வேண்டும். அரசினுடைய நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் காலியாக இருக்கிறது என்ற பட்டியலை எடுத்து வைத்திருக்கின்றோம். எனவே இது போன்ற நிறுவனங்கள் முன்வந்து ஓர் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஒரு கோடி மரங்களை நடுவதற்கு நமது மாவட்டத்தில் அதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.ஒரு கோடி மரங்கள் நடுவதற்கான இடங்கள் ஒவ்வொரு கிராமத்திலும் எங்கு இருக்கின்ற தொடர்பான ஒரு பட்டியலை கூட விரைவில்  வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
 
நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து 450 ஊராட்சிகளிலும் மரக்கன்றுகளை வளர்ப்பதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஒரு பணியாக எடுத்துக்கொண்டு நடவடிக்கை எடுத்து அனைத்து ஊர்களிலும் நர்சரி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நிகழ்ச்சி என்பது ஒரு அடையாளமான நிகழ்ச்சி. இதுபோன்று நிறைய நிறுவனங்கள் பெருமளவு மரக்கன்றுகள் நடுவற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் திரு.விவேகன்ராஜ், வனத்துறை அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலை அலுவலர்கள், பணியாளர்கள், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News