சேனை சட்னி
தேவையான பொருட்கள் - சேனைக்கிழங்கு கால் கிலோ, மிளகாய் வற்றல் 10, உளுந்து 2 டேபிள் ஸ்பூன், புளி சிறு எலுமிச்சை அளவு, பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன். உப்பு தேவைக்கு, எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்.
செய்முறை: சேனைக்கிழங்கை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்குங்கள். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து மிளகாய், பெருங்காயத்தூள், உளுந்து ஆகியவற்றை வாசனை வரும்வரை வறுத்தெடுத்து வையுங்கள். பிறகு சேனைக்கிழங்கை சிறிதளவு உப்பு சேர்த்து கரகரப்பாக வறுத்தெடுங்கள். இதனுடன் மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்தெடுங்கள். சேனை சட்னிக்கும் சாதத்துக்கும் ஜோடிப் பொருத்தம் பிரமாதமாக இருக்கும்.
0
Leave a Reply