25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


மலை மீது லட்சுமி கணபதி 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மலை மீது லட்சுமி கணபதி 

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் முல்பாகல் அருகிலுள்ள குருடு மலையில் லட்சுமிகணபதி கோயில் உள்ளது. முதல் யுகமான கிருத யுகத்தில் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவனால் உருவாக்கப்பட்ட விநாயகர் குடியிருக்கிறார்.

காலப்போக்கில் வழிபாடு இல்லாமல் போனது.' விஜயநகர மன்னரான கிருஷ்ண தேவராயரின் கனவில் தோன்றி குருடு மலையில் இருப்பதாகவும், அங்கு கோயில் கட்டுமாறும் விநாயகர் உத்தரவிட்டார். அக்கோயிலே தற்போது வழிபாட்டில் உள்ளது. சாளக்கிராம கல்லால் ஆன விநாயகர் சிலையின் உயரம் 11 அடி. கிழக்கு நோக்கியுள்ள இவரை தரிசித்தால் முயற்சி எல்லாம் வெற்றி பெறும். கருவறைக்கு அருகில் பார்த்தால் சுவாமி சிலை சிறியதாகவும், வாசலுக்கு அருகில் நின்று பார்த்தால் பெரியதாகவும் தோன்றுவது வித்தியாசமானது. அஸ்திவாரம் இல்லாமல் சமதளமான பாறையில் கோயில் கட்டப்பட்டுள்ளது.

பிரகாரத்தில் சாமுண்டீஸ்வரி, சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதிகள் உள்ளன. சிவனுக்குரிய வில்வம் தலவிருட்சமாக உள்ளது. தமிழ், கன்னடம், தெலுங்கில்கல்வெட்டுகள் உள்ளன.ஆதிகாலத்தில்தேவர்கள், ரிஷிகள்கூட்டமாகவழிபட்டதால் 'கூட்டாத்திரி மலை' என்றும் பெயருண்டு. அதுவே பின்னாளில் 'குருடு மலை' என்றானது.

ஆங்கில புத்தாண்டு 'மகா பஞ்சாமிர்த அபிஷேகம்' நடக்கும். ரதசப்தமியன்று 13 கி,மீ., சுற்றளவு கொண்ட மலையைச் சுவாமி சுற்றி வருகின்றனர். பிப்ரவரி கடைசி ஞாயிறன்று வெண்ணெய் அலங்காரமும், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரம்மோற்ஸவமும் நடக்கும். கார்த்திகை மாத குமார சஷ்டியன்று 1108 லிட்டர் கரும்புச்சாறு அபிஷேகம்,1108 சகஸ்ர மோதக ஹோமம், 1108 வடைகளால் ஆன மாலை சாத்துகின்றனர்.இங்கு வழிபடுவோருக்கு வெளிநாட்டுக்கு செல்லும் யோகம் உண்டாகும்.

கணவன், மனைவி ஒற்றுமைக்காக இங்கு 'மண்டல பூஜை' நடத்துகின்றனர். பிரசாதமாக தரும் சந்தனத்தை பூசினால் செல்வம் பெருகும்.ராகு, கேதுதோஷம்அகலவிநாயகருக்கு ஏலக்காய்மாலைசாத்துகின்றனர்.நினைத்ததுநிறைவேற 1008 மோதகம் படைக்கின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News