25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


வயதானாலும் பளபளப்பான சருமத்தை பெற…
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வயதானாலும் பளபளப்பான சருமத்தை பெற…

அனைத்து பெண்களுக்கும் தங்களது சருமத்தை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில்  ஆசை .ஆனால் நேரகுறைப்பாட்டால் அதை சீராக பராமரிக்க முடிவதில்லை. நீங்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு சில Face Pack முகத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சினைக்கும் நன்மையை வழங்கும்.

முட்டையின் வெள்ளைக்கருவை நுரை வரும் வரை அடித்துக்கொள்ளவும். அதை உங்கள் முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் அப்படியே விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

ஓர் பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்துக்கொள்ளவும். அதில் ஒருடீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி20 நிமிடங்களுக்கு அப்படியே விடவும். பின்னர் சாதாரண தண்ணீரில் கழுவவும். 

வெள்ளரிக்காரய சிறிய துண்டுகளாக வெட்டி பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ளவும். பின் அதில் தயிர் சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடங்களுக்கு அப்படியே விடவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால் இறுக்கமான சருமம் கிடைக்கும். 

கற்றாழையை சிறிய துண்டுகளாக வெட்டி அதில் உள்ள ஜெல் மற்றும் வெட்டி எடுக்கவும். அதை முகத்தில் நேரடியாக தடவி 30 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு கழுவவும்.  

ஓர் பழுத்த பப்பாளிப் பழத்தை மசித்து எடுத்து அதில் தேன் சேர்த்து முகத்தில் தடவவும்.20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.  

ரோஸ் வாட்டர் அல்லது தயிருடன் உளுத்தம்பருப்பு மாவை கலந்து எடுத்துக்கொள்ளவும். இதை முகத்தில் தடவி 20 நிமிடங்களுக்கு அப்படியே வைத்து ஸ்க்ரப் செய்யவும். பின்னர் தண்ணீரில் கழுவினால் பளபளப்பான சருமம் கிடைக்கும். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News