வேளாண்மை விரிவாக்க மையங்களில் - மின்னணு பண பரிவர்த்தனை மூலம் இடுபொருட்கள் விநியோகம் செய்யலாம்
விருதுநகர் மாவட்ட வேளாண்மை விரிவாக்க மையங்களில் மின்னணு பரிவர்த்தனை மூலம் இடுபொருட்கள் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் பருவ காலம் தொடங்கியுள்ளதால் வட்டாரங்களில் ஆங்காங்கே மழை பொழிந்து வருகிறது.
சம்பா பருவத்திற்கு தேவையான விதைகள், நுண்ணூட்ட கலவைகள், உயிர் உரங்கள், ஜிங்க் சல்பேட், ஜிப்சம் உள்ளிட்ட இடுபொருட்கள் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் இடுபொருட்களை ஏ.டி.எம் கார்டு, கூகுள் பே, போன்பே உள்ளிட்ட மின்னணு வசதிகள் கொண்ட பணமில்லா மின்னணு பரிவர்த்தனை மூலம் அரசு கணக்கில் செலுத்தி பெறுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கும் பணமில்லா மின்னணு பரிவர்த்தனை செய்யும் கருவி வழங்கப்பட்டுள்ளது.
எனவே வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் இடுபொருட்களை வாங்க வரும் விவசாயிகள் இடுபொருட்களுக்கான முழுத்தொகை அல்லது பங்களிப்புத்தொகையை ஏ.டி.எம் கார்டு, கூகுள் பே, போன்பே மூலமாக செலுத்தி வேளாண் இடுபொருட்களை பெற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply