“மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்” திட்டத்தின் கீழ் மானிய விலையில் வீட்டுத் தோட்டம் அமைப்பதற்கான தொகுப்புகள் பெற விண்ணப்பித்து பயன் பெறலாம்
விருதுநகர் மாவட்டத்தில் 2024-25-ஆம் ஆண்டிற்கு “மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்” திட்டத்தின் கீழ் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் மூலமாக 25,300 எண்கள் ஊட்டச்சத்து தளைகள் விநியோகம் செய்ய ரூ.11.385/- இலட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.அதன்படி, வீட்டுத் தோட்டத்தில் ஊட்டச்சத்து மிக்க செடிகள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் பொருட்டு வாழை, முருங்கை, பப்பாளி, கறிவேப்பிலை போன்ற 4 வகையான செடிகள் அடங்கிய தொகுப்பு இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
தொகுப்பு ஒன்றின் மொத்த விலை ரூ.60/- ஆகும். இத்தொகுப்பு 75% சதவீத மானியத்தில் ரூ.45/-க்கு வழங்கப்படும். பயனாளியின் பங்கு தொகை ரூ.15/- ஆகும். ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக ஒரு ஊட்டச்சத்து தொகுப்பு மட்டுமே வழங்கப்படும்.
இத்திட்டத்தில், பயன்பெற ஆர்வமுள்ள பயனாளிகள் https://tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது உழவன் செயலியில் பதிவு செய்தோ அல்லது அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply