₹9,825 கோடி முதலீடு: அதானி ஏர்போர்ட்ஸின் விரிவாக்கத் திட்டம்!
விமான நிலைய உள்கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் மிகப்பெரிய அளவில் முதலீட்டை திரட்ட உள்ளது.
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ், உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் அடங்கிய கூட்டமைப்புடன் சுமார் ₹9,825 கோடி, அதாவது 1 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான பங்கு மூலதனத்தை திரட்டுவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரட்டப்படும் நிதி மூலம் விமான நிலையங்களின் உள்கட்டமைப்பு விரிவாக்கம், Adani Airport City திட்டங்களின் வளர்ச்சி மற்றும் விமானப் போக்குவரத்து அல்லாத சேவைகளின் மேம்பாடு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்த விரிவாக்கங்களின் மூலம் எதிர்காலத்தில் ஆண்டுக்கு 20 கோடி பயணிகளை கையாளும் திறனை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
0
Leave a Reply