உஸ்பெகிஸ்தானில் 46-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி
உஸ்பெகிஸ்தானில் 46-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. ஓபன் பிரிவில் நடைபெற்ற 8-வது சுற்றில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, அஜர்பைஜான் அணியை எதிர்கொண்டது.
இந்திய அணியில் பிரக்ஞானந்தா, குகேஷ், விதித் குஜ்ராத்தி மற்றும் அர்ஜுன் ஆகியோர் களமிறங்கினர். பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டி 2-2 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.
பெண்கள் பிரிவு
பெண்கள் பிரிவின் 8-வது சுற்றில் இந்திய அணி, கஜகஸ்தான் அணியை எதிர்கொண்டது. நடப்பு சாம்பியனான இந்திய அணியில் ஹம்பி, வைஷாலி, திவ்யா மற்றும் சவிதாஸ்ரீ ஆகியோர் பங்கேற்றனர்.
உலகக் கோப்பை சாம்பியனான திவ்யா மற்றும் ஹம்பி ஆகியோர் தங்களது ஆட்டங்களை டிரா செய்தனர். வைஷாலி, நுர்மானிடம் தோல்வியடைந்ததால் இந்திய அணி 1-2 என்ற நிலையில் பின்தங்கியது.
கடைசி ஆட்டத்தில் சவிதாஸ்ரீ 62-வது நகர்த்தலில் எல்நாசை வீழ்த்தினார். இதையடுத்து இந்தியா–கஜகஸ்தான் போட்டி 2-2 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.
0
Leave a Reply