11TH APRIL விளையாட்டு போட்டிகள்
வில்வித்தை
உலக கோப்பை வில்வித்தை(ஸ்டேஜ் 1) தொடர் அமெரிக்காவில் ஆண்களுக்கான காம் பவுண்டு பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியாவின் ரிஷாப் யாதவ், அபி ஷேக் வர்மா, ஓஜாஸ் பிரவின் இடம் பெற்ற அணி, நான்காவது இடம் பிடித்தது.
அரையிறுதியில் இந்தியா, இத்தாலி மோதின. போட்டி ஆனது. அடுத்து நடந்த 'ஷூட் ஆப்' முறையில் இந்தியா 27-29 என தோற்றது.
வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய அணி, 230-223 டென் மார்க்கை சாய்த்தது.
பில்லி ஜீன் கிங்' டென்னிசில்..
'பில்லி ஜீன் கிங்' கோப்பை சர்வதேச டென்னிஸ் தொடரின்
பெண்கள் அணிகளுக்கான 62வது சீசன் தற்போது நடக்கிறது.இந்தியாவின் புனேயில் ஆசிய, ஓசியானா மண்டல பிரிவு போட்டி நடக்கிறது. இந்திய அணி, குரூப் ஏ-ல், தென் கொரியா, தாய்லாந்து, நியூசிலாந்து, ஹாங்காங், சீனதைபே அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
முதல் போட்டியில் நியூசிலாந்திடம் (1-2) தோற்ற இந்தியா, அடுத்து தாய்லாந்து (2-1) என வீழ்த்தியது. நேற்று தனது மூன்றாவது போட்டியில் இந்திய அணி, ஹாங்காங்கை சந்தித்தது.
முதலில் நடந்த ஒற்றையர் போட்டி யில் இந்தியாவின் வைதேகி சவுத்ரி, ஹாங்காங்கின் ஹோ சிங் உ மோதினர். இதில் வைதேகி 7-6, 6-1 என எளிதாக வெற்றி பெற்றார்.
இரண்டாவது ஒற்றையரில் இந்தியா வின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, ஹாங்காங் கின் ஹாங் வாங்கை எதிர்கொண்டார்.
முதல் செட்டை 7-6 என வசப்படுத்திய ராஷ்மிகா, அடுத்த செட்டை 2-6 நழுவ விட்டார். மூன்றாவது, கடைசி செட் டில் அசத்திய இவர், 6-3 என வென்றார்.முடிவில் ராஷ்மிகா 7-6, 2-6, 6-3 என வெற்றி பெற்றார். இந்திய அணி 2-0 என வென்றது.
0
Leave a Reply