விருதுநகர் மாவட்டத்தில் 1435-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமா.பந்தி) நடைபெற உள்ளது
விருதுநகர் மாவட்டத்தில் 1435-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 2026-ம் ஆண்டு ஜூன் 12, ஜூன்16 முதல் ஜூன் 19 வரை மற்றும் ஜூன் 23 முதல் ஜூன் 25 வரை ஆகிய நாட்களில் சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் பின்வரும் அலுவலர்களால் நடத்தப்பட உள்ளது.
வட்டம் வாரியாக வருவாய்த் தீர்வாயம்(ஜமாபந்தி) நடத்த உள்ள அலுவலர்கள் மற்றும் நாட்கள் விவரம் பின்வருமாறு :-
சாத்தூர் வட்டத்தில், ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 5 நாட்கள் மாவட்ட ஆட்சித்தலைவர், விருதுநகர் அவர்கள் தலைமையிலும், சிவகாசியில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 5 நாட்கள் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையிலும்,
திருவில்லிபுத்தூரில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 3 நாட்கள் உதவி ஆட்சியர், சிவகாசி அவர்கள் தலைமையிலும், விருதுநகரில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 7 நாட்கள் வருவாய் கோட்டாட்சியர், சாத்தூர் அவர்கள் தலைமையிலும்,
காரியாபட்டியில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 6 நாட்கள் அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையிலும்,
அருப்புக்கோட்டையில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 7 நாட்கள் உதவி ஆணையர் (கலால்), விருதுநகர் அவர்கள் தலைமையிலும், இராஜபாளையத்தில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 5 நாட்கள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், விருதுநகர் அவர்கள் தலைமையிலும்,
வெம்பக்கோட்டையில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 5 நாட்கள் தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி), விருதுநகர் அவர்கள் தலைமையிலும்,
திருச்சுழியில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 8 நாட்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், விருதுநகர் அவர்கள் தலைமையிலும்,
வத்திராயிருப்பில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 3 நாட்கள் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், விருதுநகர் அவர்கள் தலைமையிலும், வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெற உள்ளன.
வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெறும் தினங்களில் தொடர்புடைய கிராம நில உடைமைதாரர்கள் நிலப்பதிவு சம்பந்தப்பட்ட மனுக்கள், பட்டா மாறுதல், நில ஒப்படை, நில நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை தொடர்புடைய பல்வேறு கோரிக்கை தொடர்பான மனுக்களை ஜமாபந்தி அலுவலரிடம் பொதுமக்கள் நேரில் வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply