தன்வினை தன்னைச்சுடும், ஓட்டப்பம் வீட்டைச்சுடும்.
தன்வினை தன்னைச்சுடும், ஓட்டப்பம் வீட்டைச்சுடும்.
பொருள்: ஒவ்வொருவருடையவினைகளும் அவரை நிச்சயம் பாதிக்கும், ஓடுமேல் உள்ள அப்பத்தால் வீடு பற்றி எறிவதுபோல.
விளக்கம்: பட்டினத்தார் தன் செல்வச்செழிப்பான வாழ்க்கையை விட்டுத் துறவு பூண்டு தங்கள் எதிரிலேயே வீடுவீடாகப் பிச்சை எடுப்பது அவருடைய உறவினர்களுக்குப் பிடிக்காமல் அவரது சகோதரி மூலமாகஅவருக்கு நஞ்சுகலந்த அப்பம் ஒன்றை அனுப்பினர் கணபதி அருளால் இதனை அறிந்த பட்டினத்தார் அவர்களுக்குப் பாடம் புகட்ட எண்ணி, தன் சகோதரி வீட்டின் முன்நின்று அப்பத்தை வீட்டின் கூரையில் எறிந்துவிட்டுப் பாடிய பாடல்தான், இந்தப் பழமொழி. வீடு உடனே பற்றி எரிய அவர்கள் தம் தவறுணர்ந்து வருந்தியபோது, அவர் வேறொரு பாடல்பாட, நெருப்பு அணைந்தது.
0
Leave a Reply