2026 தீபாவளி திரைப்படங்கள் .
ஒரு காலத்தில் தீபாவளி பண்டிகை என்றாலே குறைந்தது ஐந்து முதல் பத்து திரைப்படங்களாவது திரைக்கு வரும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அந்த அளவுக்குப் படங்கள் வெளியாவதில்லை.
இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு நேரடித் தமிழ்ப் படங்களாக சூர்யா நடித்துள்ள 'சீன்', நயன்தாரா நடித்துள்ள 'மூக்குத்தி அம்மன் 2' ஆகிய திரைப்படங்கள் நவம்பர் 6ஆம் தேதி வெளியாகின்றன.
இதுதவிர, ரன்பீர் கபூர், சாய் பல்லவி நடிப்பில் இந்தியில் உருவாகி, பான்-வேர்ல்டு திரைப்படமாக வெளியாகும் 'ராமாயணா' திரைப்படம் நவம்பர் 5ஆம் தேதி தமிழிலும் திரைக்கு வருகிறது.
குறைவான எண்ணிக்கையிலான படங்களே வெளியாகும் நிலையில், இந்தத் தீபாவளி திரைப்படங்கள் ரசிகர்களிடையே எந்த அளவுக்கு வரவேற்பைப் பெறுகின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
0
Leave a Reply