2028 லாஸ் ஏஞ்சல்ஸ் பாராலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே இலக்கு: வில்வித்தை நாயகி ஷீத்தல் தேவி.
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்ட்வார் லொய்தார் கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான ஷீத்தல் தேவி, 'போகோமெலியா' என்ற அரிய குறைபாட்டால் இரு கைகளும் இன்றி பிறந்தவர். இருப்பினும், மன தளராமல் அன்றாடப் பணிகளைக் கால்களால் செய்து பழகிய இவர், கால்கள், தோள்பட்டை மற்றும் தாடையைப் பயன்படுத்தி அம்புகளை இலக்கை நோக்கித் துல்லியமாகச் செலுத்தும் கலையைக் கற்றுத் தேர்ந்தார். இரு கைகள் இல்லாத இந்தியாவின் முதல் பெண் பாரா வில்வித்தை சாம்பியன் என்ற பெருமையும் இவரையே சாரும்.
2023இல் 'அர்ஜுனா விருது', 2024 பாரிஸ் பாராலிம்பிக்கில் வெண்கலம், உலக சாம்பியன்ஷிப் மற்றும் உலக பாரா வில்வித்தை தொடர்களில் தொடர் பதக்கங்களை குவித்துள்ள இவர், "என்னைப் பார்த்து மற்றவர்களும் விளையாட்டுத் துறையில் சாதித்து நாட்டுக்குப் பெருமை சேர்க்க வேண்டும். 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதையே இலக்காகக் கொண்டு தீவிரப் பயிற்சி பெற்று வருகிறேன்," எனக் கூறியுள்ளார்.
0
Leave a Reply