பல்நோக்கு பண்ணைக்குட்டைகளில் மீன்வளர்ப்பு மேற்கொள்ள மீன்குஞ்சு, மீன் தீவனம், உரங்கள், பண்ணைப் பொருட்கள் மற்றும் பறவை தடுப்பு வசதிகள் ஆகிய உள்ளீட்டு பொருட்கள் 50% மானியத்தில் வழங்கப்படவுள்ளது .
ஊரகப் பகுதிகளில் 250-ச.மீ முதல் 1000-ச.மீ நீர்பரப்பு கொண்ட பல்நோக்கு பண்ணைக்குட்டைகளில் மீன்வளர்ப்பு மேற்கொள்ள மீன்குஞ்சு, மீன்தீவனம், உரங்கள், பண்ணைப் பொருட்கள் மற்றும் பறவை தடுப்பு வசதிகள் ஆகிய உள்ளீட்டு பொருட்கள் 50% மானியத்தில் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்திட ஏதுவாக நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மேற்படி திட்டத்தில் ஒரு அலகிற்கான செலவினம் ரூ.40,000/-ல் 50% மானியமாக ஒரு பண்ணைக்குட்டைக்கு ரூ.20,000/- வீதம் மானியம் வழங்கப்படவுள்ளது. விருதுநகர் மாவட்டத்திற்கு 10 அலகுகள் இலக்கு நிர்ணயம் செய்து சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் அவர்களால் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
2026-27 ஆம் ஆண்டு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இத்திட்டத்தில் பயன்பெற பயனாளிகள் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் உறுப்பினராக இருக்க வேண்டும். 250-ச.மீ முதல் 1000-ச.மீ பரப்பு கொண்ட பண்ணைக்குட்டைகளுக்கு நீரேற்றம் செய்வதற்குத் தேவையான நீர் ஆதார வசதி, ஆழ்துளை கிணறு (அ) கிணறு இருத்தல் அவசியமானதாகும்.
இந்த திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க விரும்பும் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை உறுப்பினர்கள் விருதுநகர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்கள் பெற்று கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு, விருதுநகர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை வேலை நாட்களில் நேரில் அணுகலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply