கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 3,27,830 குடும்பத்தலைவிகள் பயன்பெற்றுள்ளனர்.
உலக அளவில் சுயமரியாதையாக வாழக்கூடிய பல்வேறு சமூகங்களில், ஒடுக்கப்பட்டோர், விளிம்பு நிலை மனிதர்களுடைய வாழ்க்கை மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு மிக முக்கியமான காரணம் அவர்கள் கைகளில் பணம் இருக்க வேண்டும்.
ஒவ்வொருவருடைய கைகளில் பணம் இருக்கின்ற போது, அது தரக்கூடிய தன்னம்பிக்கையும், ஆறுதலும் எழுத்திலும் சொல்லிலும் சொல்ல முடியாது. இன்றைய நவீன பொருளாதார அறிஞர்கள் கூட, மக்கள் கையில் அவர்கள் விருப்பத்திற்கும் அத்தியாவசியமான செலவுக்கு பணம் கையில் இருப்பது பொருளாதார வளர்ச்சிக்கும் தனி மனிதனுடைய மேம்பாட்டிற்கும் மிக முக்கியம் என்று குறிப்பிடுகிறார்கள்.இது இன்றைக்கு மட்டுமல்ல 2000 ஆண்டுகளுக்கு முன்பு கூட தமிழர்களின் உடைய அறிவின் அடையாளமாக கருதப்படும் திருக்குறளில்
“செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் எஃகதனிற் கூரிய தில்” என பகைவரின் செருக்கை அழிக்கும் தகுதியான கருவி பொருளைத் தவிர வேறொன்றும் இல்லை என திருவள்ளுவர் கூறுகிறார்.ஒரு நாட்டினுடைய பொருளாதாரத்தை அந்த நாட்டில் உற்பத்தியாகும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மூலமாக கணக்கிடப்படும் பொழுது உழைப்பை முதலீடாகக் கொண்ட பல்வேறு அங்கத்தினரின் உழைப்பு முறையாக கணக்கிடப்படவில்லை என்று பொருளாதார அறிஞர்கள் தொடர்ச்சியாக குறிப்பிடுகிறார்கள்.
அதிலும் குறிப்பாக ஒவ்வொரு நாளும் அதிகாலையில் இருந்து இரவு வரை வீட்டு வேலைகளை செய்யக்கூடிய நம் மகளிர் தன்னுடைய அவர்களின் உழைப்பு முறையாக வகைப்படுத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட்டிருக்கிறதா என்று பார்த்தால் அதை அதில் பெரிய இடைவெளி இருப்பதாக பல்வேறு ஆராய்ச்சிகளும் பொருளாதார அறிஞர்களும் குறிப்பிடுகின்றனர். அந்த வகையில் பெண்களுடைய உழைப்பை அங்கீகரிக்கக் கூடிய வகையில் அவர்களுக்கான உரிமை தொகை வழங்கும் இந்த கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை என்ற சிறப்புமிகு திட்டம் தமிழ்நாடு முழுவதும் தொடங்கி வைக்கப்பட்டு, மாதந்தோறும் ரூ.1000/- பெண்களின் வங்கி கணக்கில் வழங்கப்பட்டு வருகிறது.
பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கொடுப்பதும், பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு சமூகத்தில் அவர்கள் வாழ்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.வீட்டை விட்டு வெளியில் சென்று வேலை பார்ப்பவர்கள் தான் வேலை செய்கிறார்கள் என்று காலம் காலமாக இருந்து வருகிறது. இந்த சமுதாயத்திற்கு அடிப்படையான குடும்பத்தின் ஆணிவேராக இருப்பது பெண்கள்தான்.
குடும்பத்தை உயர்த்துவதற்கும், குழந்தைகள், கணவர்கள், குடும்ப உறுப்பினர்கள் என அனைவருக்காகவும் உழைக்கும் பெண்களுக்கு இந்தியாவிலேயே முதல் முதலாக அங்கீகாரம் கொடுத்தது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு.இது உதவியாக இல்லாமல் இதை பெறுவதற்கு பெண்களுக்கு உரிமை இருக்கின்றது. பெண்கள் செய்து கொண்டிருக்கின்ற கடமைக்கான உரிமையை பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.
அதன்படி தமிழகத்தில் முதற்கட்டமாக 15.09.2023 அன்று 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
இரண்டாம் கட்டமாக 10.11.2023 அன்று மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000ஃ- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில், கள ஆய்வு நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பயனாளிகளான 7.35 இலட்சம் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக தற்போது வரை இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாட்டில் குடும்பத்தலைவிகளுக்கு உரிய விதிமுறைகளைப் பின்பற்றி மாதந்தோறும் 1000 ரூபாய் அவர்களின் வங்கிக்கணக்கில், வரவு வைக்கும் இத்திட்டத்தின் மூலம் நாளது வரையில் 1 கோடியே 15 இலட்சம் குடும்பத் தலைவிகள் பயனடைந்துள்ளனர்.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் 3,27,830 குடும்பத் தலைவிகள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர்.
0
Leave a Reply