மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 42 மாற்றுத்திறனாளிகள் தனியார்த்துறை நிறுவனங்களில் பணிநியமனம் பெற்றனர்
விருதுநகர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் (21.06.2024) விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் விருதுநகர் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து நடத்தப்பட்டது.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு பணிக்காலியிடங்களுக்கு 45 தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான பணியாளர்களை தேர்வு செய்தன. இதில் 357 வேலை நாடுநர்கள் கலந்து கொண்டனர். 42 மாற்றுத்திறனாளிகள் தனியார்த்துறை நிறுவனங்களில் பணிநியமனம் பெற்றனர். இரண்டாம் கட்டத் தேர்வுக்கு 17 மாற்றுத்திறனாளிகளும் தேர்வு செய்யப்பட்டனர். பொதுப் பயனாளிகள் 38 பேர் பணிநியமனம் பெற்றனர்.
17 மாற்றுத்திறனாளிகள் திறன் பயிற்சி வேண்டி பதிவு செய்தனர். இம்முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன்கள், கைக்கடிகாரம், வங்கிக்கடன் மானியம் மற்றும் காதொலி கருவி போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இம்முகாமில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்(பொது) திருமதி.சு.ஞானபிரபா, அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் திரு.செல்லக்கனி, மாவட்ட தொழில் மைய துணை இயக்குநர் திரு.வெங்கடேசன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (தொழில்நெறிவழிகாட்டி) திருமதி.அ.பிரியதர்ஷினி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.ஜெயபிரகாஷ் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply