25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >>


சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவி தொகை பெறும் பயனாளிகள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்க வேண்டும்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவி தொகை பெறும் பயனாளிகள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்க வேண்டும்.

விருதுநகர் மாவட்டத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவி தொகை பெறும் பயனாளிகளுக்கு இந்திய அரசின் அறிவுறுத்தலின்படி, செப்டம்பர் மாதம் முதல் ஆதார் அடிப்படையிலான பணப்பரிவர்த்தனை முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இம்மாதம் முதல் பயனாளிகளுக்கான நிதியுதவி அவர்களின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

அனைத்து பயனாளிகளுக்கும் அரசின் முறையான நடவடிக்கைகள் மூலம் நிதியுதவி தடையின்றி சென்றடைவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இதுவரை இணைக்கப்படாத பயனாளிகள், தங்களது வங்கியை அணுகி ஆதார் இணைப்பை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் அல்லது உதவி தேவைப்பட்டால் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள தனித் துணை ஆட்சியர்(ச.பா.தி.) அலுவலகம் மற்றும் ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் உள்ள தனி வட்டாட்சியர் (ச.பா.தி.) அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களை பயனாளிகள் அணுகலாம். அங்கு தேவையான வழிகாட்டுதலும் உதவியும் வழங்கப்படும்.

ஒவ்வொரு பயனாளிக்கும் நிதியுதவி எவ்வித இடையூறும் இன்றி சீராக சென்றடைவதை உறுதி செய்வதில் அரசு உறுதியாக உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News