அரசுப்பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 19.11.2026 அன்று நடைபெறவுள்ளது .
விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரியும் அரசுப்பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு புதிய மருத்துவக்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவ செலவினத் தொகை திரும்பக் கோரும் இனங்களின் மீது தீர்வு காணும் பொருட்டு, விருதுநகர் மாவட்ட அளவிலான குறைதீர்க்கும் நாள் கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் 19.11.2026 அன்று பிற்பகல் 4.00 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்கள்/குடும்ப ஓய்வூதியர்களுக்கு புதியமருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் குறைபாடுகள் ஏதும் இருப்பின் அது தொடர்பான கோரிக்கை மனுக்களை 10.11.2026 முதல் 13.11.2026 முடிய விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு இரட்டைப் பிரதிகளில் அனுப்பி வைக்கலாம். விண்ணப்பங்களில் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடர்பான குறைதீர்க்கும் நாள் மனு எனக் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்.
அரசுப் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்கள்/குடும்ப ஓய்வூதியர்கள் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து அதன் மீது இணை இயக்குநர்(மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள்) மற்றும் இன்சுரன்ஸ் நிறுவனத்தால் ஆவணங்கள் கோரப்பட்டிருக்கும் பட்சத்தில் மேற்படி கூட்டத்தில் தகுந்த ஆவணங்களுடன் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S ., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply