25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


தினமும் கட்டாயம் சாப்பிட வேண்டிய  உணவுகள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தினமும் கட்டாயம் சாப்பிட வேண்டிய  உணவுகள்.

மாதுளை: ஒரு மாதுளையைத் தினமும் சாப்பிட்டு வாருங்கள். இது உடலின் காரத்தன்மையை (Alkaline effect) அதிகரித்து ரத்தத்தைச் சுத்திகரிக்கும்.

எள்: இரண்டு ஸ்பூன் எள்ளை வாயில் போட்டு மென்றோ அல்லது சமைக்கும் பொரியல்களில் தூவிக்கொண்டோ சாப்பிடலாம். இது உடலுக்குத் தேவையான கால்சியத்தை அதிகரிக்கும்.

வெந்தயம்: வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து அந்தத் தண்ணீரைக் குடிக்கலாம் அல்லது ஊறிய வெந்தயத்தை மென்று சாப்பிடலாம். இது உடலில் உள்ள தேவையில்லாத உஷ்ணத்தை வெளியேற்றி, சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்.

காய்ந்த திராட்சை: பத்துக் காய்ந்த திராட்சையை இரவில் ஊறவைத்து, மறுநாள் காலையில் நன்றாக மென்று சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்; மலக்குடல் ஆரோக்கியமாக இருக்கும்.

கருப்பட்டி: ஒரு சிறிய துண்டு கருப்பட்டியைத் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். நட்ஸுடன் சேர்த்தோ அல்லது பானங்களில் கலந்தோ குடிக்கலாம். இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News