72-வது தேசிய சீனியர் கைப்பந்து ,தமிழக பெண்கள் அணி வெற்றி.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில்,72-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றுள்ள 30 ஆண்கள்அணிகளும், 28 பெண்கள் அணிகளும் தலா 6 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள்லீக்கில் மோதி வருகின்றன.
'எப்' பிரிவில் இடம் பிடித்துள்ள தமிழக பெண்கள் அணி நேற்று நடந்த தனது 3-வது லீக் ஆட்டத்தில் ஜார்கண்டை சந்தித்தது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தமிழக அணி 25-7, 25-11, 25-7 என்ற செட் கணக்கில் ஜார்கண்டை தோற்கடித்து தொடர்ச்சியாக 3-வது வெற்றியை பெற்றது. . தமிழக பெண்கள் அணி, இன்றுநடைபெறும் கடைசி ஆட்டத்தில் ,மராட்டியத்தை எதிர்கொள்கிறது.
0
Leave a Reply