78வது தேசிய பாட்மின்டன் தமிழக அணி சாம்பியன் .
மாநிலங்களுக்கு இடையிலான 78வது தேசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் ஆந்திராவின் விஜயவாடாவில் ,அரையிறுதியில் தமிழக அணி 3-2 என உத்தரகாண்ட்டை வென்றது.அடுத்து நடந்த பைனலில் தமிழகம், ஹரியானா அணிகள் மோதின
ஹரியானாவின் மன் ராஜ் சிங், தமிழகத்தின் சங்கர் முத்துசாமியை முதலில் நடந்த ஒற்றையர் போட்டியில்வென்றார். தமிழகத்தின் ரித்விக்கை அடுத்தபோட்டியில் ஹரியானா வீரர் பாரத் ராகவ், வென்றார். அணி 0-2 என பின் தங்கியது.
தமிழகத்தின் ஹரி ஹரன், ரூபன் ஜோடி அடுத்து நடந்த இரட்டையர் போட்டியில் வெற்றி பெற்றனர். தமிழக வீரர் சுகி ஜாய் பாலா சிங், கவுதம் அரோராவை வீழ்த்த, மூன்றாவது ஒற்றையர் போட்டியில் 2-2 என சமன் ஆனது. இரண்டாவது இரட்டையர் போட்டி கடைசியாக தமிழகத்தின்நவீன் லோகேஷ் ஜோடி, 10 ஒரு மணி நேரம், நிமிடம் நடந்த போராட்டத்துக்குப் பின், மயங்க், ஆர்யன் ஜோடியைவென்றது. முடிவில் தமிழக அணி 3-2 என்ற கணக்கில் சாம்பியன் பட்டத்தை வென்றது.
ஹரியானா அணி, சிந்து இடம் பெற்ற ஆந்திராவை பெண்கள் பிரிவு பைனலில் சந்தித்தது. ஹரியானா அணிசிந்து விளையாடாத நிலையில் 3-0 என வென்று சாம்பியன் ஆனது.
0
Leave a Reply