25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


சிவகாசி அரசு மருத்துவமனையில் ரூ.32.65 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் தாய் சேய் நல பிரிவு கட்டடத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறப்பு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிவகாசி அரசு மருத்துவமனையில் ரூ.32.65 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் தாய் சேய் நல பிரிவு கட்டடத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறப்பு.

 தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் (04.08.2026)  தலைமைச் செயலகத்தில் இருந்து  காணொலி காட்சியின் வாயிலாக விருதுநகர் மாவட்டம், சிவகாசி அரசு மருத்துவமனையில் ரூ.32.65 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் தாய் சேய் நலப்பிரிவு கட்டடத்தினை திறந்து வைத்தார்.

 அதனைத் தொடர்ந்து தொழில் ,முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில்  அவசர சிகிச்சை பிரிவு கட்டடத்தினை  பொதுமக்களின் பயன்பாட்டிற்கு குத்து விளக்கு ஏற்றி  தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்  அவர்கள் தமிழக மக்களின் ஆரோக்கியத்திற்கும், சுகாதார மேம்பாட்டிற்கும் பல்வேறு உட்கட்டமைப்பு வசதியினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மூலம் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில் சிவகாசி பகுதி பொதுமக்கள் உயர்தரமான மருத்துவ சேவையினை எவ்வித பொருளாதார செலவுமின்றி உள்ளூரிலேயே தரமான உயர்தர சிகிச்சையினை பெற்று கொள்ளும் வகையில்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இந்த கட்டிடம் காணொலிகாட்சியின் வாயிலாக   (04.08.2026) திறந்து வைக்கப்பட்டுள்ளது.சிவகாசி அரசு மருத்துவமனை தற்போது 140 படுக்கைகள் வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 550 வெளி நோயாளிகள், 140 உள் நோயாளிகள், மாதம் ஒன்றுக்கு 120 பிரசவங்கள், 24,509 ஆய்வக பரிசோதனைகள், 161 பெரிய அறுவை சிகிச்சைகள் மற்றும் 318 சிறிய அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைபெற்று வருகிறது.

மேலும் இம்மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு (TAEI), திறன்மிகு தீக்காய சிகிச்சைப் பிரிவு மற்றும் பச்சிளங்குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சைப் பிரிவுகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.சிவகாசி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துவதற்காக அரசாணை எண்.53  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நாள்:01.03.2024-ன் படி ரூ. 23.75 கோடி மதிப்பில் PM-ABHIM திட்டத்தின் கீழ் 50 படுக்கைகள் கொண்ட Critical Care Block NHM மூலம் 8.7958 கோடி மதிப்பீட்டில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு (Maternal Child Health Wing) இரண்டும் ஒருங்கிணைந்து ரூ.32.54 கோடி மதிப்பீட்டில் ஒரே கட்டிடமாக தரைத்தளம் மற்றம் 6 தளங்களுடன் தீவிர சிகிச்சைப்பிரிவு & மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு (CRITICAL CARE BLOCK & MATERNAL CHILD HEALTH WING) கட்டப்பட்டுள்ளது.

மேலும், அந்த கட்டிடத்தில் தரை தளத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு (TAEI), அவசர அறுவை அரங்கு, நுண்கதிர் பிரிவு (Hyperbaric Oxygen Therapy for Burns) மற்றும் இரத்த சுத்திகரிப்பு மையம் (Hemodialysis), முதல் தளத்தில் பிரசவ வெளிநோயாளிகள் பிரிவு, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், குடும்ப தல மையம் மற்றும் பிரசவ அறை (LDR Complex). HDU மற்றும் பிரசவ முன்கவனிப்பு பிரிவு (Antenatal Ward), இரண்டாவது தளத்தில் பிரசவ Twin அறுவை அரங்கம், தீவிர சிகிச்சைப்பிரிவு, அறுவை சிகிச்சைக்குப் பின் கவனிப்பு பிரிவு, மூன்றாம் தளத்தில் பொது அறுவை அரங்கம், எலும்புபிரிவு அறுவை அரங்கம், ஆண்கள் அறுவை சிகிச்சைக்குப் பின் கவனிப்புபிரிவு, நான்காம் தளத்தில் பிரசவத்திற்கு பின் கவனிப்பு பிரிவு (Postnatal Ward), மற்றும் Level -1, Level II, Level-III வசதியுடன் கூடிய பச்சிளங்குழந்தைகள் சிறப்பு சிகிச்சைப்பிரிவு, ஐந்தாம் தளத்தில் பெண்கள் சிகிச்சைப்பிரிவு, இயன்முறை சிகிச்சைப்பிரிவு மற்றும் தீவிர சிகிச்சைப்பிரிவு, ஆறாம் தளத்தில் ஆண்கள் சிகிச்சைப்பிரிவு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவுகள் உள்ளிட்ட வசதிகள் சிறப்பாக அமையப்பெற்றுள்ளது. மேலும், இக்கட்டிடத்தில் Police Outpost Central Oxygen, CCTV, LAN Connection Fire Fighting Equipments, Lift வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இப்புதிய மருத்துவ கட்டிடத்தில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் (Critical Care Block) 50 படுக்கை வசதிகள், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல பிரிவில் (Maternal Child Health Wing) 100 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதன் அடிப்படையில் 150 படுக்கைகள் அதிகரித்து 290 படுக்கை வசதிகள் கொண்ட புதிய கூடுதல் கட்டிடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப் பட்டுள்ளது.இதனை பொதுமக்கள் அனைவரும் நல்ல முறையில் பயன்படுத்தி தங்களது ஆரோக்கியத்தினையும், சுகாதாரத்தினையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டுன் என  தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் மக்கள் நல பணிகள்) திரு.செந்தில்குமார்,  சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S , துணை இயக்குநர் (மருத்துவமனை மருத்துவ அலுவலர்) திரு.அய்யனார்,  அரசு அலுவலர்கள், மருத்துவ பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News