25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பில் சிறப்பாக பயின்ற மாணவர்களுக்காக நீட் மற்றும் க்யூட் நுழைவு தேர்வுக்கான 1 மாத இலவச பயிற்சி வகுப்பு  தொடங்கியுள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பில் சிறப்பாக பயின்ற மாணவர்களுக்காக நீட் மற்றும் க்யூட் நுழைவு தேர்வுக்கான 1 மாத இலவச பயிற்சி வகுப்பு தொடங்கியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைகழகத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முன்னெடுப்பாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பில் சிறப்பாக பயின்ற 110 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கான தங்குமிடம், உணவு வசதிகளுடன் கூடிய நீட் மற்றும் க்யூட் நுழைவு தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்கப்பட்டு, 1 மாத காலம்(01.04.2025 முதல் 30.04.2025 வரை) நடைபெறுகிறது.

தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகப்படுத்தும் வகையிலும், உயர்கல்வியில் உள்ள பல்வேறு வாய்ப்புகளை அறிந்து கொள்ளும் வகையிலும், சிறந்த மதிப்பெண்கள் எடுத்துள்ள மாணவர்கள் மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, இந்திய அளவில் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் சேர்ந்து பயிலும் வகையிலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, மாவட்டத்தில் தற்போது 12 ஆம் வகுப்பில் சிறப்பாக பயின்ற 110 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கான தங்குமிடம், உணவு வசதிகளுடன்; நீட் மற்றும் க்யூட் நுழைவுத் தேர்வுக்கான 1 மாத இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.அதன்படி, 70 மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகளும், 40 மாணவர்களுக்கு  க்யூட் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளும் 01.04.2025 முதல் 30.04.2025 வரை நடத்தப்படுகிறது.

இப்பயிற்சி வகுப்பில் சிறந்த ஆசிரியர்கள் மூலம் மாணவ, மாணவிகளுக்கு தேர்விற்கு தயார்படுத்துவது, தேர்வில் பாடப்பிரிவு வாரியாக கேட்கப்படும் கேள்விகள், அதற்குரிய மதிப்பெண்கள், எளிதான, நடுத்தர, கடினமான கேள்விகள் என தரம் பிரித்து அணுகும் முறைகள், எளிதாக கேள்விக்கான பதில்களை மனதில் பதிய வைத்தல் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்துரைக்கப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News