பட்டம்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஹட்சன் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின் கீழ், கட்டப்பட்ட கூடைப்பந்தாட்ட மைதானம்
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், பட்டம்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஹட்சன் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின் கீழ், ரூ.15 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கூடைப்பந்தாட்ட மைதானத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் (15.07.2024) திறந்து வைத்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் சமூகத்தின் மீதான தொழில் நிறுவனங்களின் பொறுப்பு நிதியினை (CSR Fund) கொண்டு பள்ளிகள், உட்கட்டமைப்பு மேம்படுத்துதல், பள்ளி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்குதல், கற்றல் மற்றும் கற்பித்தலில் திறனை மேம்படுத்துதல், பள்ளி சுவர்களில் சிந்தனையினை தூண்டும் வகையில் சித்திர விளக்கப் படங்கள் வரைதல் (BaLA Painting), அங்கன்வாடி மையங்கள் மேம்படுத்துதல், நீர்நிலைகளை புனரமைத்தல், அரசு மருத்துவ மனைகளுக்கு உபகரணங்கள் வழங்குதல் மற்றும் வாழ்வாதார மேம்பாடு செய்தல் போன்ற வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இன்று பட்டம்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளி, திருத்தங்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ரிசர்வ் லைன் அரசு மேல்நிலைப்பள்ளி 3 இடங்களில் தலா ரூ.15 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.45 இலட்சம் மதிப்பில் சமூக பொறுப்பு நிதியின் கீழ், கட்டப்பட்ட கூடைப்பந்தாட்ட மைதானங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு மைதானத்திற்கும் 3 அரசு பள்ளிகள் வீதம் மொத்தம் 9 பள்ளிகளை தேர்ந்தெடுத்து, பள்ளிக்கு ஒரு கூடை பந்தாட்ட அணி உருவாக்கப்படும். அந்த அணியில் உள்ள மாணவர்கள் தினமும் காலை, மாலையில் பயிற்சி செய்து கூடைப்பந்தாட்டப் போட்டிக்கு தயார் செய்யப்படுவார்கள். இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
வெற்றியாளர் என்பது விளையாட்டில் கலந்து கொண்டு பரிசு பெறுபவர்கள் மட்டுமல்ல. அதில் கலந்து கொண்டு சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்துபவரும் வெற்றியாளர் தான். எனவே, அரசுப் பள்ளி மாணவர்கள் இந்த மையதானத்தை பயன்படுத்திக் கொண்டு, பயிற்சி செய்து சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
பின்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட 9 பள்ளியை சேர்ந்த 96 மாணவர்களுக்கு மூடுகாலனி (ஷ_ஸ்) மற்றும் ஒரு அணிக்கு 6 பந்துகள் வீதம் மொத்தம் 54 பந்துகள் என ரூ.1.35 மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply