25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் தலைமையில் குழந்தைகள் மற்றும் முதியோர்கள் பாதுகாப்பு தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் தலைமையில் குழந்தைகள் மற்றும் முதியோர்கள் பாதுகாப்பு தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகள் மற்றும் முதியோர் பாதுகாப்பு, போதை பொருட்கள் ஒழிப்பு கிராம அளவிலான கண்காணிப்பு குழு தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்பினை  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம அளவில் பொதுமக்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பதால், இத்தகைய சமூகப் பிரச்சினைகளைக் கண்டறிவதில் அவர்களின் பங்கு முக்கியமானதாகும். எனவே, கிராம அளவிலான கண்காணிப்புக் குழுவின் நோக்கங்கள், செயல்பாடுகள், பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றும் முறைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய உதவிகளைப் பெற்றுத் தருவதற்கான வழிமுறைகள் குறித்து அலுவலர்கள் தெளிவான புரிதலைப் பெற்றிருக்க வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோர் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு, குழந்தைத் திருமணம், இளம்வயது கர்ப்பம், பாலியல் வன்கொடுமை, பள்ளி இடைநிற்றல், குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, பெண்கள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு, போதைப் பொருட்கள் பயன்பாட்டினை தடுத்தல் மற்றும் கிராமப்புற மேம்பாடு குறித்து மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் சாத்தூர் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட விருதுநகர், சாத்தூர், வெம்பக்கோட்டை வட்டங்களில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான கிராம கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு குழு ( Village Vigilance Committee) மற்றும் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு ( Village Level Child Protection Committee) கூட்டம் குறித்த திறன் வளர்ப்பு பயிற்சி நடைபெறுகிறது.

மேலும், இனிவரும் காலங்களில் ஒவ்வொரு மாதமும் 4-வது புதன் கிழமையன்று கிராம கண்காணிப்பு குழு ( Village Vigilance Committee) மற்றும் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு ( Village Level Child Protection Committee) கூட்டம் நடைபெறும். இதில் மேற்கண்ட செயல்பாடுகள் குறித்து  விவாதித்து புகார்கள் ஏதேனும் இருப்பின் மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

இப்பயிற்சியின் மூலம் கிராம நிர்வாக அலுவலர்களின் செயல்திறனை மேம்படுத்தி, குழந்தைகள் மற்றும் முதியோர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, போதைப்பொருட்கள் இல்லாத பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொறுப்பு) திரு.சோமசுந்தர சீனிவாசன், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் திருமதி மீனாட்சி, திட்ட இயக்குநர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள்) திருமதி ஷீலா சுந்தரி, கிராம நிர்வாக அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்த கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News