பாரா ஆசிய விளையாட்டு,பாட்மின்டன் போட்டி.
துளசிமதி பிரமாதம்: 3 பதக்கங்களை வென்று அசத்தல்.
பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளின் பாட்மின்டன் பிரிவில் தமிழக வீராங்கனை துளசிமதி, ஒரு தங்கம் மற்றும் 2 வெள்ளி என மொத்தம் 3 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.
பெண்கள் இரட்டையர் பிரிவு: இந்தியாவின் துளசிமதி - மானசி ஜோடி, சீனாவின் யாங் கியூஜியா - ஜியாவோ ஜுஜியான் ஜோடியை எதிர்கொண்டது. இதில் துளசிமதி - மானசி ஜோடி 21-16, 21-13 என்ற நேர் செட்களில் அபார வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு (SU5): இப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் துளசிமதி, சீனாவின் யாங் கியூஜியாவிடம் 18-21, 11-21 என்ற செட்களில் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு (SL4)
இறுதிப்போட்டியில் இந்தியாவின் நவீன் சிவகுமார், இந்தோனேஷியாவின் பிரெடி செடியவானை எதிர்கொண்டார். இதில் நவீன் 21-9, 21-17 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு (SL3)
இந்திய வீரர்கள் பிரமோத் பகத் - நிதேஷ் குமார் மோதிய இறுதிப்போட்டியில், நிதேஷ் 21-18, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார். இதன் மூலம் வெள்ளி வென்ற பிரமோத் பகத்திற்கு 'ஹாட்ரிக்' தங்கம் வெல்லும் வாய்ப்பு கைநழுவியது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு (SH6)
இறுதிப்போட்டியில் இந்தியாவின் நித்யா ஸ்ரீ சுமதி சிவன், சீனாவின் பெங்மெய் லியிடம் 12-21, 13-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றினார்.
0
Leave a Reply