கிரிக்கெட் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய பெண்கள் அணி அபார வெற்றி!
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே பெண்கள் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
குஜராத், வதோதராவில் உள்ள கோடாம்பி மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில், 'டாஸ்' வென்ற ஜிம்பாப்வே அணி கேப்டன் நோம்வெலோ சிபாண்டா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஜிம்பாப்வே இன்னிங்ஸ்: 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 197 ரன்கள் எடுத்தது.
இந்திய இன்னிங்ஸ்: 198 ரன்கள் என்ற சுலபமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 27.1 ஓவர்களிலேயே 1 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
0
Leave a Reply