25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


உழைக்கும் மக்களால் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவு.பழைய சோறு .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உழைக்கும் மக்களால் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவு.பழைய சோறு .

சமைத்த சாதத்தில் மீதமாகும் சோற்றில் ,தண்ணீர் ஊற்றி மறுநாள் காலை  சாப்பிடும் உணவான, பழைய சோறு உழைக்கும் மக்களால் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவு. 

ஆனால் இன்று பலரும் விரும்பி உண்ணப்படும் உணவாக மாறி இருக்கிறது. பல நூற்றாண்டுகளாக தமிழர்களின் பாரம்பரிய உணவாக இருந்து வரும் இது,உடல்நலத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருவதால், நம் முன்னோர்களால் அமுதம் என்று போற்றப்பட்டது.

பழைய சோற்றில் உள்ள நொதிகள் செரிமானத்திற்கு உதவக்கூடியவை. குறிப்பாக, குடல் இயக்கங்களை சீராக்கி, மலச்சிக்கல் மற்றும் அஜீரணக் கோளாறுகளை தடுக்கக்கூடியவை. பழைய சோற்றில் கால்சியம், இரும்புச் சத்து, பொட்டாசியம் போன்ற சத்துக்களும் உள்ளன. மேலும், அரிதான வைட்டமின் பி6 மற்றும் பி12 போன்றவையும் இடம் பெற்றுள்ளன. பழைய சோற்றில் உள்ள இந்த நொதிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கின்றன.

பழைய சோற்றின் புளிப்புச் சுவைக்கு காரணம் அதில் உள்ள லாக்டிக் பாக்டீரியா அமிலம் ஆகும். பழைய சோறு சாப்பிடும்போது, தயிர், உப்பு, சீரகம், சாம்பார் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவது சுவையையும், சத்துக்களையும் அதிகரிக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News