கபடியில் இந்தியாவுக்கு தொடர் வெற்றி.
ஆண்களுக்கான கபடி போட்டியில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. முதல் போட்டியில் ஜப்பானை வீழ்த்திய இந்திய அணி, நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தென் கொரியாவை எதிர்கொண்டது.
முதல் பாதியில் இந்திய அணி 34-14 என்ற புள்ளிக் கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் ஆதிக்கத்தைத் தொடர்ந்த இந்தியா, 29-17 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
முடிவில் இந்திய அணி 63-31 என்ற புள்ளிக் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி, தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.
இந்திய அணி அடுத்ததாக இன்று வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.
0
Leave a Reply