நேர்மறையான எண்ணங்களோடு பயணிக்க பெண்களுக்கு உதவியாக உள்ள வெள்ளி கொலுசு.
பெண்களின் கால்களுக்குக் கூடுதல் அழகைச் சேர்க்கிறது அவர்கள் அணியக்கூடிய கொலுசுகள். இந்தியாவில் வெள்ளிக்கென்று தனி மவுசு உள்ளது.நம்முடைய முன்னோர்கள் சொல்லக்கூடிய ஒவ்வொரு விஷயங்களிலும் ஒவ்வொரு விதமான பராம்பரியம் ஒளிந்துள்ளது. இதைப் பராம்பரியமாக பின்பற்றி வந்தாலும், இக்காலத்திற்கு ஏற்ப பல விதமான டிசைன்களில் அணிந்து மகிழ்கின்றனர். அதுவும் பெண்களுக்கு அழகு சேர்ப்பதோடு, உடலுக்கு ஆரோக்கியத்திற்கு என்பதால் வெள்ளியில் கொலுசுகளை அணிந்து மகிழ்கின்றனர்..பொதுவாக ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு உடல் சூடு அதிகமாக இருக்கும். இவற்றைக் குறைக்க வேண்டும் என்பதால் தான் வெள்ளியிலான கொலுகளை அணிய சொல்கின்றனர்.. வெள்ளி கொலுசுகளைப் பெண்கள் காலில் அணியும் போது எலும்புகள் வலுவடையும். வெள்ளி உலோகம், கணுக்கால்களைத் தொடும் போது, தோலில் ஊடுருவி எலும்புகளை வலுப்படுத்த உதவியாக உள்ளது.வெள்ளி கொலுகளை அணியும் பெண்களுக்கு மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைக் குணப்படுத்தவும், கருப்பையை ஆரோக்கியமாக வைத்திருக்கும் உதவியாக உள்ளது. மேலும் வெள்ளியிலான கொலுசுகளை அணியும் போது பெண்களுக்கு ஹார்மோன் அளவை சமன் செய்ய உதவியாக உள்ளது என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றனர்.
நாள் முழுவதும் பெண்கள் நின்றுக் கொண்டே பல்வேறு வேலைகளைச் செய்வதால் கால் வலி பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், இந்த பிரச்சனையை வெள்ளி கொலுசு அணிவதன் மூலம் தீர்க்க முடியும்.வெள்ளி கொலுசுகள் குதிகால் நரம்பைத் தொட்டு கொண்டிருப்பதால், இந்த நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது. இதோடு பெண்களின் இடுப்பு பகுதியை உறுதிப்படுத்தவும் வெள்ளி கொலுசுகள் பயன்படுகிறது. இதனால் தான் நம்முடைய முன்னோர்கள் கட்டாயம் கால்களில் தண்டை, சிலம்பு, கொலுசு என காலத்திற்கு ஏற்ப பல வடிவங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.உடலில் உள்ள சூட்டை அகற்றுவதோடு, இதனால் ஏற்படக்கூடிய சரும பிரச்சனைகளையும் சரி செய்வதற்கு வெள்ளி கொலுசுகள் உதவியாக உள்ளது.வெள்ளி கொலுசுகளை அணிவதன் மூலம் பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்றும், இதோடு பெண்களுக்கு ஏற்படக்கூடிய பல்வேறு விதமான நோய்களுக்குத் தீர்வு காணவும் உதவியாக உள்ளது. வெள்ளி கொலுசுகளைக் கால்களில் அணியும் பெண்கள் அழகாகத் தெரிவதோடு, உலோகத்தில் உள்ள கதிர்வீச்சுகள் அவர்களின் மனநிலையை மாற்றமும், எப்போதும் நேர்மறையான எண்ணங்களோடு பயணிக்கவும் பெண்களுக்கு உதவியாக உள்ளது..
0
Leave a Reply