வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு
விருதுநகர் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறையின்; சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் (30.05.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, வெம்பக்கோட்டை வட்டாரம், இரவார்பட்டி கிராமத்தில், தமிழ்நாடு நீடித்த நிலையான பசுமை போர்வைக்கான இயக்கம் 2023-24 (TNMSGCF) திட்டத்தின்கீழ், 5 ஏக்கர் பரப்பளவில் 950 சவுக்கு மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருவதையும்,அதனை தொடர்ந்து, சுப்பிரமணியபுரம் கிராமத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் நுண்ணீர் பாசனம் முறையில் 5 ஏக்கர் பரப்பளவில் தென்னை மரங்கள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருவதையும்,தாயில்பட்டி கிராமத்தில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், கமலம் பழம் மானியத்தில் வழங்கப்பட்டு சாகுபடி செய்யப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குநர் திருமதி க.விஜயா, வேளாண்மை துணை இயக்குநர் /மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி ஆ.நாச்சியார் அம்மாள், திருவில்லிபுத்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் திருமதி கு.தனலட்சுமி, வேளாண்மைத்துறை அலுவலர்கள், தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply