25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஆடி அமாவாசை: முன்னோர்களை நினைவு கூர்ந்து தர்ப்பணம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆடி அமாவாசை: முன்னோர்களை நினைவு கூர்ந்து தர்ப்பணம்.

தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் ஆடி அமாவாசை, முன்னோர்களை நினைவுகூர்ந்து தர்ப்பணம் செய்வதற்கு சிறப்பான நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து முன்னோர்களுக்கு எள் மற்றும் தண்ணீரால் தர்ப்பணம் செய்வது வழக்கம்.

முன்னோர்களுக்கு பிடித்த உணவை காகத்திற்கு வைப்பது, கோயிலுக்குச் சென்று வழிபடுவது, பசுவுக்கு பழங்கள் மற்றும் அகத்திக்கீரை வழங்குவது, ஏழைகளுக்கு உணவு அளிப்பது போன்றவற்றையும் செய்யலாம். விரதம் இருப்பவர்கள் வெங்காயம், பூண்டு சேர்க்காத உணவை உட்கொள்வதும், வாழை இலையில் சாப்பிடுவதும் வழக்கமாகக் கூறப்படுகிறது.

பெற்றோர் அல்லது முன்னோர்களின் இறந்த தேதி, திதி தெரியாதவர்கள் அல்லது உரிய நாளில் திதி கொடுக்கத் தவறியவர்களும் இந்த நாளில் தர்ப்பணம் செய்வது சிறப்பு என நம்பப்படுகிறது.

ஆடி அமாவாசை நேரம் துவக்கம் : ஆகஸ்ட் 12, 2026 (புதன்கிழமை) அதிகாலை 02:11 AM.

ஆடி அமாவாசை நேரம் துவக்கம் : ஆகஸ்ட் 12, 2026 (புதன்கிழமை) அதிகாலை 02:11 AM.

நிறைவு: ஆகஸ்ட் 13, 2026 ~ 12:16 AM.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News