இந்திய செஸ்: 100வது கிராண்ட்மாஸ்டர் ஆனார் அனுஜ் ஸ்ரீவத்ரி!
பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 7வது ஆசிய தனிநபர் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் ஓபன் பிரிவில் இந்தியா சார்பில் அனுஜ் ஸ்ரீவத்ரி, அமேயா, ரிட்விஸ் பிரதாப் உட்பட 40 பேர் பங்கேற்றனர்.
முதல் சுற்றில் பிலிப்பைன்ஸின் ஆர்காவிடம் தோல்வியடைந்த அனுஜ், அதன்பின் எழுச்சி பெற்று அடுத்த 8 சுற்றுகளில் 7 வெற்றிகளையும் 2 'டிரா'க்களையும் பதிவு செய்தார். 9 சுற்றுகளின் முடிவில் 7.0 புள்ளிகளுடன் ஓபன் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார். 2020-இல் சர்வதேச மாஸ்டர் (IM) பட்டம் வென்று, பி.டெக் படிப்பையும் முடித்த அனுஜ், 6 ஆண்டுகளுக்குப் பிறகு கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்று இந்தியாவின் 100வது கிராண்ட்மாஸ்டராக உருவெடுத்துள்ளார்.
0
Leave a Reply