25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


அபிஷேக் சர்மா அதிரடி சதம்: இந்தியா ஹாட்ரிக் வெற்றி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அபிஷேக் சர்மா அதிரடி சதம்: இந்தியா ஹாட்ரிக் வெற்றி.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்திய அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

இந்தியா வந்த ஆப்கானிஸ்தான் அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, ஏற்கனவே தொடரை 2-0 என கைப்பற்றியிருந்தது.

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற கடைசி போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதிரடியாக விளையாடிய இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது. இந்திய வீரர் அபிஷேக் சர்மா 30 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார்.

கடின இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 14.1 ஓவர்களில் 94 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் இந்திய அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 3-0 என கைப்பற்றியது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News