25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


பொங்கல் திருநாள்-2026 னை முன்னிட்டு,  சாதி, இன, மத என எவ்வித வேறுபாடுமின்றி அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து பங்கேற்கும்  சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பொங்கல் திருநாள்-2026 னை முன்னிட்டு, சாதி, இன, மத என எவ்வித வேறுபாடுமின்றி அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து பங்கேற்கும் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், கடம்பன்குளம் ஊராட்சியில் (14.01.2026) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் முன்னிலையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் சாதி, இன, மத என எவ்வித வேறுபாடுமின்றி அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து பங்கேற்கும் மயிலாட்டம், கரகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் இயற்கைக்கும், சமூக வேறுபாடுகளை மறந்து ”பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்ற உயரிய தமிழர் சிந்தனை நடைமுறையை வெளிப்படுத்தும் நாளான பொங்கல் திருநாளை, சமத்துவப் பொங்கலாக விருதுநகர் மாவட்டத்தில் 450-கிராம ஊராட்சிகளிலும் கொண்டாட  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டதைத் தொடர்ந்து, இன்று இந்தப் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.

 தமிழர் திருநாளான இந்த பொங்கல் திருநாள் மனிதர்களுக்கான பொங்கல் மட்டுமின்றி, அனைத்து கால்நடைகளுக்கும் ஒரு பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. மேலும், அனைவரும் ஒரு பொதுவான இடத்தில் சந்தித்து காணும் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.நம் தமிழ் இனத்தைச் சார்ந்த அனைவரும் இணைந்து வாழ வேண்டும் என நம் முன்னோர்கள் கூறிய அடிப்படையில் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாட உத்தரவிட்டுள்ளார்.இந்த ஆண்டு பொங்கல் திருநாளை இனிதே கொண்டாடும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.3 ஆயிரம் வீதம் வழங்கப்பட்பட்டுள்ளது. தொடர்ந்து, ஒரு கிலோ பச்சரிசி,ஒரு கிலோ சர்க்கரை,கரும்பு உள்ளிட்டவைகளை வழங்கியுள்ளார் நம்முடைய , தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.

இந்த ஆண்டு பொங்கல் திருநாளை இனிதே கொண்டாடும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுமார் 6 இலட்சத்து 4 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் ரூ.181 கோடி வழங்கப்பட்பட்டுள்ளது. தொடர்ந்து, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவைகளை வழங்கியுள்ளார் நம்முடைய  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில், கோலப்போட்டி, கயிறு இழுத்தல், இசை நாற்காலி, கண்கட்டி பானை உடைத்தல், பலூன் உடைத்தல், நடனம்,  கரகாட்டம், ஒயிலாட்டம், பரதம் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.தொடர்ந்து, சிறுவர்களுக்கு நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு பரிசுகளையும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நடத்தப்பட்ட கோலப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும்  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திரு.வீ.கேசவதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News