2030 காமன்வெல்த் போட்டிக்கு தயாராகும் ஆமதாபாத்.
2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை குஜராத்தின் ஆமதாபாத் நகரம் நடத்தவுள்ளது. இதையொட்டி, இந்திய வீரர்கள் கிளாஸ்கோ தொடரில் சிறப்பாக செயல்பட்டு அடுத்த தொடருக்கான நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதற்கிடையில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் மாநில விளையாட்டுத் துறை அதிகாரிகள் அடங்கிய குழு கிளாஸ்கோவுக்கு பயணம் மேற்கொள்கிறது.
அங்கு போட்டி ஏற்பாடுகள், விளையாட்டு அரங்குகள், வீரர்களுக்கான வசதிகள் உள்ளிட்ட அம்சங்களை நேரில் ஆய்வு செய்து, அதனை முன்மாதிரியாகக் கொண்டு ஆமதாபாத்தில் உலகத் தரத்திலான விளையாட்டு உள்கட்டமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
0
Leave a Reply