பெகா ஓபன் ஸ்குவாஷ் தொடரில் அனாஹத் சிங் 2வது இடம்
ஆஸ்திரேலியாவில் நடந்த பெகா ஓபன் ஸ்குவாஷ் தொடர் ,பெண்களுக்கான பைனலில் இந்தியாவின் அனாஹத் சிங் 17, எகிப்தின் ஹபிபா ஹனி மோதினர்.
அரையிறுதி போட்டியின் போது கணுக்காலில் காயமடைந்த அனாஹத், முதல் செட்டை 11-9 என வென்றார். அடுத்த இரு செட்களை 5-11, 8-11 என இழந்த அனா ஹத், 4வது செட்டில் 4-10 என பின்தங்கி இருந்த போது காயத்தால் பாதியில் விலகினார்.
எகிப்து வீராங்கனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். உலக தரவரிசையில் 53வது இடத்தில் உள்ள அனாஹத், 2வது இடத்துடன் ஆறுதல் அடைந்தார்.
0
Leave a Reply