25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சர்க்கரை அளவு கட்டுப்பட அருகம்புல் சாறு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சர்க்கரை அளவு கட்டுப்பட அருகம்புல் சாறு.

அருகம்புல் ஒருசிறந்த இயற்கைஇரத்த சுத்திஆகும். 

தினமும்காலை வெறும்வயிற்றில் இதன்சாறு அருந்தினால்இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் நீங்கும்.

கொலஸ்ட்ரால் கட்டுப்படும்.சர்க்கரை அளவு சமநிலையில் இருக்கும்.தோல் ஆரோக்கியமாக மெருகூட்டப்படும்.

பண்டைய வைத்தியர்கள் இதனை“இயற்கை அமிர்தம்” எனவே அழைத்தனர்.அருகம்புல் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியை அளிக்கும்.

வெப்பத்தால் ஏற்படும் சிறுநீர் எரிச்சல், வயிற்றுப்புண், உள் சூடு ஆகியவற்றைத் தணிக்கும்.

உடலில் பித்தம் அதிகரித்திருந்தால், அருகம்புல் சாறு அதனை சமநிலைப்படுத்தும்.சூ

டான காலங்களில் தினமும் ஒரு டம்ளர் அருகம்புல் சாறு குடிப்பது உடல் வெப்பத்தைக் குறைத்து மன அமைதியை அளிக்கும்.

அருகம்புல் புண்களை விரைவாக ஆற்றும் தன்மை கொண்டது.

காயம் ஏற்பட்ட இடத்தில் அருகம்புல் சாறு தடவினால் ரத்தம் உடனே நிற்கும்.

மஞ்சளுடன் கலந்து அரைத்து சொறி, சிரங்கு, அரிப்பு, படர்தாமரை, வேர்குருபோன்ற தோல் பிரச்சனைகளில் பூசினால் விரைவில் குணமாகும்.இது சொரியாசிஸ், அக்கி கொப்புளம் போன்ற தோல் நோய்களுக்கும் பயன்படுகிறது.

 அருகம்புல்+ பசு வெண்ணெய் சேர்த்து40 நாட்கள் தொடர்ந்து காலை வெறும் வயிற்றில் எடுத்தால்,உடல் தளர்ச்சி நீங்கும்.

நரம்புகள் வலுப்படும்முகம் பளபளப்பாக மாறும்.அதனால் பண்டைய சித்தர்கள் இதனை “உடல் தேற்றி” என்று அழைத்தனர்.

அருகம்புல் சாறு ஒரு சிறந்த இம்யூனிட்டி பானம். ஒரு கிளாஸ் தண்ணீரில் அரை கைப்பிடி அருகம்புல் மற்றும் 10-12 மிளகு சேர்த்து கொதிக்கவைத்து தினமும் குடிக்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.ஒவ்வாமை(Allergy) பிரச்சனைகள் குறையும்.

அருகம்புல் சாறு100 மில்லி அளவிற்கு குடித்தால் மாதவிடாய் காலரத்தப்போக்கு சமநிலைப்படுத்தப்படும்.

அதிக ரத்தப்போக்கு குறையும்.கருப்பை ஆரோக்கியம் மேம்படும்.

அருகம்புல் சிறுநீர் பெருக்கி மற்றும் கல்லடைப்பு நீக்கும் இயற்கை மருந்து.

இதன் சாற்றில் மிளகுத்தூள், நெய் சேர்த்து குடித்தால் சிறுநீர் தடக்கம் நீங்கும்.

குடல் புண் சரியாகும், வயிற்றுப்போக்கு, வெள்ளைப்போக்கு குறையும்.

 அருகம்புல் இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்தக்குழாய் தடிமனாகாது தடுக்கிறது.

உயர் மற்றும் குறை இரத்த அழுத்தம் இரண்டுமே கட்டுப்படும்.

இதயத்துடிப்பு ஒழுங்காகும், மனஅழுத்தம் குறையும்.

நீரிழிவு நோயாளிகள் தினமும் காலை வெறும் வயிற்றில்அரைடம்ளர்அருகம்புல் சாறு குடித்தால் சர்க்கரை அளவு கட்டுப்படும்.

காலில் எரிச்சல், சோர்வு, கை நடுக்கம் போன்றவை குறையும்.உடல் எடை சீராகும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News