மீனாட்சி, ஜெய்ஸ்மின் ஆசிய குத்துச்சண்டை போட்டியில் அரை இறுதியை எட்டினார்.
மங்கோலியா தலைநகர் உலான்பத்தூரில் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் போட்டியின் பெண்கள் பிரிவில் நேற்று நடந்த 48 கிலோ எடைப்பிரிவின் கால் இறுதியில் உலக சாம்பியனான இந்தியாவின் மீனாட்சி ஹூடா 5-0 என்ற கணக்கில் ஜப்பானின் யுகா சதாமட்சுவை வென்று அரை இறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் ஜெய்ஸ்மின் லம்போரியா (57 கிலோ) 5-0 என்ற கணக்கில் சீனாவின் ஜியி சென்னை வென்று அரை இறுதிக்கு முன்னேறினர்.
இந்தியாவின் லோகேஷ் (85 கிலோ) கொரியா வின் கிச்சாய் கிம்மையும், ஆகாஷ், துர்க்மெனிஸ்தானின் பாக்டி யாரோவையும், ஹர்ஷ் சவுத்ரி (90 கிலோ). கிர்கிஸ்தானின் அலி பேயையும் ஆண்கள் பிரிவில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினர்.
0
Leave a Reply