ஆசிய கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய பெண்கள் அணி.
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் பெண்களுக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில், இந்திய அணி தொடர்ந்து 2வது வெற்றியைப் பதிவு செய்து அரையிறுதிக்கு முன்னேறியது.
துபாயில் நடைபெற்ற ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியா–ஹாங்காங் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது.
கடினமான இலக்கை விரட்டிய ஹாங்காங் அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 16.2 ஓவர்களில் 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதன் மூலம் இந்திய அணி அபார வெற்றி பெற்று, தொடரில் தொடர்ந்து 2வது வெற்றியைப் பதிவு செய்ததுடன் அரையிறுதி வாய்ப்பையும் உறுதி செய்தது.
0
Leave a Reply