ஆசிய சாம்பியன்ஸ் டிராபி: மலேசியாவை வீழ்த்தியது இந்தியா.
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி லீக் போட்டியில், இந்திய அணி 4-2 என, மலேசியாவை வீழ்த்தியது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர், மொகாலியில், ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி 9வது சீசன் நடக்கிறது.
நேற்று நடந்த லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' இந்திய அணி, மலேசியாவை எதிர்கொண்டது. இரு அணிகளும் ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறின.
ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4-2 என்ற கணக்கில் தொடர்ச்சியாக 4வது வெற்றியை பதிவு செய்தது. இதுவரை முடிந்த போட்டிகளின் முடிவில் இந்தியா 12 புள்ளிகள் பெற்றுள்ளது.
0
Leave a Reply