டி-20 தொடரை வென்றது இந்தியா.
ஐந்தாவது 'டி-20' போட்டியில் இந்தியா தோற்ற போதும், தொடரை 3-2 என வென்று, கோப்பை கைப்பற்றியது.
இந்தியா, நியூசிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் மோதின. முதல் மூன்று சவாலில் இந்தியா வென்றது. நான்காவது போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. ஐந்தாவது போட்டி நேற்று (நவ.1) ஹாமில்டன், செடான் பார்க் மைதானத்தில் நடந்தது.
'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர், 'பவுலிங்' தேர்வு செய்தார்.
இந்திய அணி 20 ஓவரில் 191/8 ரன் எடுத்தது. சவாலான இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணி 18 ஓவரில் 195/3 ரன் எடுத்து, சுலப வெற்றி பெற்றது.
0
Leave a Reply