டாஸ்மாக் கடைகளில் ரூ.1000/- க்கு மேல் இணைய வழியில் மட்டுமே பணபரிவர்த்தனை நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
விருதுநகர் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் மதுபானங்களை வாங்கும்போது எழும் தேவையற்ற புகார்களை தவிர்க்கவும், ரொக்கமாக அதிகளவிலான பணத்தினை கையாளுவதை தவிர்க்கவும் நுகர்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை தவிர்க்கவும், மின்னணு பணப்பரிவர்த்தனை முறையில் மட்டுமே பணம் செலுத்திட வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அதன்படி, 01.11.2026 முதல் ஒரு விற்பனையில் ரூ.1000/- க்கும் மேல் மின்னனு முறையில் மட்டுமே விற்பனை அனுமதிக்கப்படும் .
01.01.2027 முதல் ஒரு விற்பனையில் ரூ.500/- க்கும் மேல் மின்னனு முறையில் மட்டுமே விற்பனை அனுமதிக்கப்படும் .
நுகர்வோர் எளிமையாக இணையவழி மதுபான முன்பதிவு முறையின் மூலமும் தொகையினை செலுத்தி கடைக்கு நேரில் வந்து மதுபானங்களை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் நுகர்வோர்களின் புகார்களுக்கு 1800 889 2015 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply