ஆசிய ரக்பி செவன்ஸ்: இந்திய மகளிர் அணிக்கு வெண்கலம்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய ரக்பி செவன்ஸ் தொடரில், இந்திய மகளிர் அணி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
அரையிறுதிப் போட்டியில் மலேசியாவை எதிர்கொண்ட இந்திய அணி, கடைசி வரை போராடியும் 12-14 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தது.
இதையடுத்து நடைபெற்ற வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இலங்கையை எதிர்கொண்ட இந்திய வீராங்கனைகள், அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 27-0 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றனர்.
இதன் மூலம் இந்திய மகளிர் அணி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக (2025, 2026) வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதற்கிடையே, ஆடவர் பிரிவில் 7-வது இடத்திற்கான போட்டியில் தாய்லாந்தை எதிர்கொண்ட இந்திய அணி, 24-7 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று 7-வது இடத்தைப் பிடித்தது.
0
Leave a Reply